திருவோணத்தை அடுத்துள்ள இலுப்பவிடுதி கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் மகன் மணிகண்டன் (வயது32). கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் இவர் அதே பகுதியில் உள்ள ஒரு கோவிலின் பூஜை நிகழ்ச்சிக்கு ஒலிபெருக்கி அமைப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக இவரை மின்சாரம் தாக்கியது. இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய மணிகண்டனை பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே மணிகண்டன் பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் குறித்து திருவோணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.