தூக்கு போட்டு தொழிலாளி சாவு
தூத்துக்குடியில் தூக்கு போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி மேலசண்முகபுரத்தை சேர்ந்தவர் சுதாகர் (வயது 31). இவர் என்.எல்.சி.யில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சிவந்தாகுளம் ரோட்டில் உள்ள தாளபுஷ்பம் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டாராம். இதுதொடர்பாக குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் தாளபுஷ்பம் வீட்டின் மாடியில் சுதாகர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.