வாய்க்காலில் தவறி விழுந்த தொழிலாளி சாவு

வாய்க்காலில் தவறி விழுந்த தொழிலாளி இறந்தார்.

Update: 2023-01-06 19:48 GMT

முசிறி அருகே உள்ள வேப்பந்துறை கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது 45). கூலித் தொழிலாளியான இவரும், அவரது உறவினரான பெரியசாமி (50) என்பவரும் மோட்டார் சைக்கிளில் மின்வாரிய அலுவலகத்திற்கு சென்றனர். அப்போது, திண்ண கோணம் வாய்க்கால் அருகே சென்ற போது, முருகேசன் இயற்கை உபாதை கழிப்பற்காக இறங்கி சென்றார். இந்த நிலையில் நீண்டநேரம் ஆகியும் முருகேசன் திரும்பவரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பெரியசாமி வாய்க்காலுக்கு சென்று பார்த்தபோது, முருகேசன் வாய்க்கால் கரையில் பிணமாக கிடந்தார். கால்களை கழுவ சென்றபோது, அவர் தண்ணீரில் தவறி விழுந்து இறந்ததாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் முசிறி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்