அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு

அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி இறந்தார்.

Update: 2022-11-11 19:26 GMT

திருச்சி உறையூர் களத்துமேடு பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 59). தொழிலாளி. திருச்சி மாம்பழச்சாலை சர்வீஸ் ரோட்டில் புதிதாக அடுக்குமாடி கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த கட்டிடத்தில் தண்ணீர் ஊற்றும் பணியை செல்வம் செய்து வந்தார். இவர் சம்பவத்தன்று 2-வது மாடியில் உள்ள பகுதியில் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த போது கால் தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்