தேவதானப்பட்டி அருகே விஷம் குடித்து தொழிலாளி சாவு
தேவதானப்பட்டி அருகே தொழிலாளி விஷம் குடித்து இறந்துபோனார்.
தேவதானப்பட்டி அருகே உள்ள கோவில்புரத்தை சேர்ந்தவர் பிரவீன்குமார் (வயது 29). கூலித்தொழிலாளி. இவர் குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் இன்று வீட்டில் யாரும் இல்லாதபோது விஷத்தை குடித்து பிரவீன்குமார் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து ஜெயமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.