கிரேன் மோதி தொழிலாளி சாவு

பொள்ளாச்சியில் கிரேன் மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-06-27 22:30 GMT


பொள்ளாச்சி

பொள்ளாச்சி சி.டி.சி. மேடு அண்ணா காலனியை சேர்ந்தவர் ராஜன் (வயது 35). கூலி தொழிலாளி. இந்த நிலையில் அவர் பொள்ளாச்சி-கோவை ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கிரேன் அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து பொள்ளாச்சி நகர கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிரேன் ஓட்டி வந்த திருவண்ணாமலையை சேர்ந்த கோவிந்தன் (68) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.



Tags:    

மேலும் செய்திகள்