ராமநாதபுரம் அருகே உள்ள சாத்தான்குளம் முனியன்வலசையை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 52). இவர் ராமநாதபுரம் பாரதிநகரில் உள்ள ஓட்டலில் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இவர் பணி முடிந்து டவுன் பஸ்சில் வந்து சாத்தான்குளம் பஸ் நிறுத்தத்தில் இறங்கி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த கார் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சுப்பிரமணியன் பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து குறித்து ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவரான சேலம் மாவட்டம் எடப்பாடி மஞ்சக்காடு பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவரை தேடிவருகின்றனர்.