போலீசார் கண்டித்ததால் தொழிலாளி தற்கொலை

தேனி அருகே வேறு பெண்ணுடன் குடும்பம் நடத்தியதை போலீசார் கண்டித்ததால் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்

Update: 2022-07-12 14:12 GMT

தேனி அருகே உள்ள கோடாங்கிபட்டியை சேர்ந்த பெருமாள் மகன் கோவிந்தராஜ் (வயது 34). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி போதுமணி. இவர்களுக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகள் உள்ளார். கடந்த சில ஆண்டுகளாக கோவிந்தராஜ் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்தார். இதனால் அவருடைய மனைவி அவரை பிரிந்து ஆண்டிப்பட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.

இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கோவிந்தராஜ் தனது வீட்டில் நெல்லையை சேர்ந்த ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து போதுமணி ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் கோவிந்தராஜையும், அவருடன் பழகி வந்த பெண்ணையும் அழைத்து கண்டித்து அனுப்பினர்.

இதனால் மன விரக்தியில் இருந்த கோவிந்தராஜ் நேற்று தனது வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்ததும் பழனிசெட்டிபட்டி போலீசார் அங்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவருடைய தந்தை பெருமாள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்