தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

ராதாபுரம் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-07-01 18:59 GMT

ராதாபுரம்:

ராதாபுரம் அருகே சமூகரெங்கபுரம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முருகன் (வயது 43). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி இசக்கியம்மாள். இவர்களுக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த முருகன் நேற்று தனது வீட்டில் திடீரென்று சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ராதாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்