தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
அருப்புக்கோட்டை அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி சிலோன் காலனியை சேர்ந்தவர் சந்திரசேகர்பாபா (வயது 48). கூலி தொழிலாளி. இந்நிலையில் இவரது மனைவி அலமேலு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் அவரை பிரிந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்த சந்திரசேகர்பாபா நேற்று முன்தினம் திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சகோதரி சந்தனமேரி அளித்த புகாரின் பேரில் டவுன் போலீசார் சந்திரசேகர் பாபா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.