தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

பள்ளிகொண்டா அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2023-04-20 15:15 GMT

பள்ளிகொண்டாவை அடுத்த பிராமண மங்கலம் புதுமனை பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் நவீன் குமார் (வயது 26), கட்டிட தொழிலாளி. திருமணமாகி 6 வருடங்கள் ஆன நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக மனைவி பிரிந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த நவீன் குமார் குடிப்பழக்கத்திற்கு அடிமையானார். மேலும் அவருக்கு வலிப்பு நோய் இருந்துள்ளது. வலிப்பு வரும்போது ரத்த வாந்தி எடுத்து வந்துள்ளார். இதற்கு சிகிச்சையும் எடுத்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று அதேப் பகுதியில் துக்க நிகழ்ச்சிக்கு நவீன் குமார் உட்பட அவரது குடும்பத்தினர் அனைவரும் சென்றனர். பின்னர் நேற்று காலை 11 மணிக்கு நவீன்குமார் மட்டும் அங்கிருந்து வீட்டுக்கு வந்தார். அப்போது அவரது வீட்டு அறையில் இருந்த மின்விசிறியில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பின்னர் அவரது குடும்பத்தினர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது நவீன் குமார் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்து அலறடித்துக் கொண்டு, அவரை மீட்டு பள்ளிகொண்டாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக கூறினர். பள்ளிகொண்டா சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நவீன் குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்