தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

மூலைக்கரைப்பட்டியில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-02-27 19:19 GMT

இட்டமொழி:

மூலைக்கரைப்பட்டி மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் பரமசிவன். இவருடைய மகன் சிவசங்கர் (வயது 35) கூலித்தொழிலாளி. சற்று மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் பரமசிவன் உடல்நலம் சரியில்லாமல் நெல்லையில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அப்போது வீட்டில் தனியாக இருந்த சிவசங்கர் திடீரென கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்ததும் மூலைக்கரைப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி, சப்-இன்ஸ்பெக்டர் ஆழ்வார் ஆகியோர் விரைந்து சென்று, உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்