தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

Update: 2022-11-07 18:45 GMT


விழுப்புரம்

விழுப்புரம் பகுதியை சேர்ந்தவர் சச்சிதானந்தம்(வயது 50) தொழிலாளி. திருமணம் ஆகாத இவர் விழுப்புரம் நேருஜி சாலையில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் விழுப்புரம் பானாம்பட்டை சேர்ந்த ஒரு பெண்ணுடன் கடந்த 3 மாதமாக குடும்பம் நடத்தி வந்த சச்சிதானந்தம் நேற்று முன்தினம் வீட்டில் உள்ள மின்விசிறி கொக்கியில் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து விழுப்புரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்