தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

திருவள்ளூர் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-07-26 06:53 GMT

திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் கீழ்நல்லாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் தமிழ் அன்சாரி (வயது 35). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி உம்முசல்மா (30) என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். தமிழ் அன்சாரியின் தாயார் கடந்த ஆண்டு காலமானார். இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் சரிவர வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். நேற்று முன்தினம் தமிழ் அன்சாரியின் மனைவி வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டார்.

இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த தமிழ் அன்சாரி மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி மணவாளநகர் போலீசில் புகார் செய்தார். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழ் அன்சாரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவரது சாவு குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்