தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

ஓட்டப்பிடாரம் அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-11-13 18:45 GMT

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பசுவந்தனை வடக்கு தெருவை சேர்ந்த ராமர் என்பவருடைய மகன் சிங்கத்துரை (வயது 38), கூலி தொழிலாளி. இவர் அடிக்கடி மது அருந்திவிட்டு தனது மனைவியுடன் தகராறு செய்வதை வழக்கமாக ெகாண்டிருந்தார். இதேபோல் நேற்று முன்தினமும் மது குடித்துவிட்டு மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த சிங்கத்துரை, பூச்சி மருந்தை குடித்தார். உறவினர்கள் அவரை மீட்டு ஓட்டப்பிடாரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இரவில் பரிதாபமாக சிங்கத்துரை உயிர் இழந்தார். இச்சம்பவம் குறித்து பசுவந்தனை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். சிங்கதுரைக்கு லட்சுமி என்ற மனைவியும், மதன் பாபு என்ற மகனும், மதுமித்ரா என்ற மகளும் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்