தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

வில்லுக்குறி அருகே 2 பெண்களை மணந்த தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-08-27 14:51 GMT

திங்கள்சந்தை:

வில்லுக்குறி அருகே 2 பெண்களை மணந்த தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

வில்லுக்குறி அருகே உள்ள குளுமைக்காடு பகுதியை சேர்ந்தவர் சிவபெருமாள் (வயது 64), தொழிலாளி. இவருக்கு மரியபுஷ்பம் (55) என்ற மனைவியும், 2 மகள்கள், ஒரு மகன் உண்டு. சிவபெருமாள் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார்.

இந்தநிலையில் சிவபெருமாள் ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த உறவினர் செல்வி (52) என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு சிபில் (21) என்ற மகன் உள்ளார். சிவபெருமாளுக்கு அதிகமாக மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாகவும், இதனால் அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்ததாகவும் தெரிகிறது.

இந்தநிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த சிவபெருமாள் வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். உடனே அவரை உறவினர்கள் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து அவரது மகன் சிபில் இரணியல் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்