விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
வடமதுரை அருகே கடனை திருப்பி செலுத்த முடியாததால் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
வடமதுரை அருகே உள்ள பிலாத்து கம்பிளியம்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 54). கூலித்தொழிலாளி. இவரது மனைவி நாகலட்சுமி. இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் ஆறுமுகம் புதிதாக வீடு ஒன்றை கட்டி வந்தார். இதற்காக அவர் கடன் வாங்கியுள்ளார். அந்த கடனை அவரால் திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் ஆண்டிப்பட்டி குளத்துக்கரையில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அங்கமுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.