விஷம் தின்று தொழிலாளி தற்கொலை

விஷம் தின்று தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-08-27 18:52 GMT

காரையூர் அருகே கரையாம்பட்டியை சேர்ந்தவர் சின்னையா மகன் விக்ரம் (வயது 38). இவர் ஆலம்பட்டி விலக்கு ரோட்டில் டீக்கடை நடத்தி வந்தார். இவரது மனைவி சிவப்பு ரோஜா (35). கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், விக்ரம் தனது கடையில் விஷ விதைகளை (விஷம்) மிக்சியில் அரைத்து குடித்து மயங்கி கிடந்தார். இதைப்பார்த்த அருகில் இருந்தவர்கள் விக்ரமை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து காரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்