3 கிலோ கஞ்சாவை கடத்திய தொழிலாளி கைது
3 கிலோ கஞ்சாவை கடத்திய தொழிலாளி கைது
காரமடை,
காரமடை அருகே அன்னூர் நால்ரோடு பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காரமடை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. இதையடுத்து காரமடை இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் சப்- இன்ஸ்பெக்டர் சுல்தான் இப்ராஹீம் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுப்பட்டு வந்தனர். அப்போது அந்தவழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவரை போலீசார் விசாரணை மேற்கொண்டதில் முன்னுக்கு பின் முரணாக கூறியுள்ளனர் .இதனையடுத்து அவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் துடியலூர் அண்ணா காலனியை சேர்ந்த ரகுநாதன் (வயது40) என்பதும், கட்டிட வேலை செய்து வருவதும், விற்பனை செய்வதற்காக கஞ்சாவை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து ரகுநாதனை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து விற்பனை செய்வதற்காக வைத்திருந்த 3 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.