சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி கைது

பந்தலூரில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளியை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-06-18 14:08 GMT

பந்தலூர்,

பந்தலூர் பகுதியில் பழங்குடியினத்தை சேர்ந்த 16 வயது சிறுமி கடந்த 15-ந் தேதி மாயமானார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் எருமாடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் சிறுமியை காணவில்லை என்று வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். தொடர்ந்து சிறுமியை மீட்டு, போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பந்தலூரை சேர்ந்த கூலித்தொழிலாளியான அருண்குமாருக்கும், சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு உள்ளது. அருண்குமார் சிறுமியை ஆசைவார்த்தை கூறி அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதைதொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) வளர்மதி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அருண்குமாைர கைது செய்தார். 

Tags:    

மேலும் செய்திகள்