பெண்கள் திடீர் சாலைமறியல்

நெல்லை டவுனில் பெண்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

Update: 2023-06-03 19:22 GMT

நெல்லை டவுன் பகத்சிங் தெரு, ஜெயபிரகாஷ் தெரு, வேணுவனகுமாரர் தெரு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக குடிநீரில் சாக்கடை கலந்து வினியோகம் செய்யப்படுகிறது. இதனை தடுத்து சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள், மாநகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனாலும் அங்கு சுத்தமான குடிநீர் வழங்கப்படவில்லை.

இதையடுத்து நேற்று அந்த பகுதி பெண்கள் சாக்கடை கலந்த குடிநீர் குடங்களுடன் நெல்லை டவுன் காட்சி மண்டபம் பகுதிக்கு வந்தனர். அங்கு மெயின் ரோட்டில் நின்று திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் டவுன் போலீசார் மற்றும் மாநகராட்சி இளநிலை பொறியாளர் சேகர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு மறியலில் ஈடுபட்டவர்களை சாலையோரத்துக்கு அழைத்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது குழாய்களில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக குடிநீரில் சாக்கடை கலந்திருக்கலாம், அதனை சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து மறியலை கைவிட்ட பெண்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்