மகளிர் சுய உதவிக்குழுவினர் முன்வர வேண்டும்

மகளிர் சுய உதவிக்குழுவினர் முன்வர வேண்டும்

Update: 2023-07-31 18:45 GMT

சொந்த தொழில் தொடங்க மகளிர் சுய உதவிக்குழுவினர் முன்வரவேண்டும் என்று கலெக்டர் சாருஸ்ரீ பேசினார்.

மகளிர் சுய உதவிக்குழு கடன் வழங்கும் விழா

திருவாரூரில் மகளிர் சுய உதவிக்குழு கடன் வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தலைமை தாங்கி, மகளிர் சுய உதவிக்குழுவினர்களுக்கு கடன் தொகைக்கான காசோலைகளை வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:-

திருவாரூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட முகாம் 4 தாலுகாவில் தொடங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 5 தாலுகாவில் வருகிற 5-ந்தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட முகாம் நடைபெறும். மகளிர்கள் சொந்தமாக தொழில் தொடங்குவதற்காக மகளிர் சுய உதவிக்குழு மூலம் கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

சொந்தமாக தொழில் தொடங்க முன்வர வேண்டும்

மகளிர் சுய உதவிக்குழுவில் பங்கு பெறும் மகளிர் தங்கள் வாங்கும் கடனை சரியாக செலுத்தி வருகின்றனர். அதன் அடிப்படையிலே வங்கிகளில் தனி நபர் கடனை விட மகளிர் சுய உதவிக்குழுக்கடனிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இது பாராட்டத்தக்க கூடியதாகும். மகளிர் சுய உதவிக்குழுவினர் சொந்த தொழில் தொடங்க முன்வர வேண்டும். சொந்த தொழில் தொடங்குவதற்கான பயிற்சி பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. உங்களுக்கு எந்த சுய தொழில் ஆர்வமுள்ளதோ அதில் பயிற்சி பெறலாம்.

எனவே தங்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வாய்ப்பினை சரியான முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதில் மகளிர் திட்ட இயக்குனர் வடிவேல், வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா உள்ளிட்ட அரசு அலுவலர்கள், வங்கியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்