கும்பாபிஷேக விழாவில் பெண்களிடம் 18 பவுன் நகை பறிப்பு

கும்பாபிஷேக விழாவில் பெண்களிடம் 18 பவுன் நகை பறிப்பு

Update: 2022-08-22 16:07 GMT

முதுகுளத்தூர்

முதுகுளத்தூர் அருகே உள்ள கீழசாக்குளம் கிராமத்தில் நேற்று தர்ம முனீஸ்வரர் கருப்பணசாமி கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் போஸ் மனைவி குருவம்மாள்(வயது 60) என்பவரிடம் 11 பவுன் தங்க சங்கலி, மணிமுத்து மனைவி பாரதி(30) என்பவரிடம் 1¼ பவுன் நகை, பூச்சி மனைவி பாண்டியம்மானிடம் 2 பவுன் சங்கிலியை மர்மநபர்கள் பறித்து சென்று விட்டனர். மேலும் பரமக்குடி மரக்கையார் பட்டினத்தை சேர்ந்த கருப்பையா மனைவி காளிமுத்துவிடம் 3½ பவுன் தங்கச்சங்கிலி என மொத்தம் 18 பவுன் நகையை பறித்து சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் முதுகுளத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்