மேலூர் பஸ் நிலையத்தில் பெண்கள் போராட்டம்

மேலூர் பஸ் நிலையத்தில் பெண்கள் போராட்டம்

Update: 2023-04-14 20:41 GMT

மேலூர், 

மேலூரில் இருந்து உடப்பன்பட்டிக்கு இரவில் டவுன் பஸ் இயக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பெண்கள் பஸ் நிலையம் முன்பு இரவில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலூர் போலீசார் சமரசம் செய்து வேன்களிலும் ஆட்டோக்களிலும் போராட்டம் நடத்தியவர்களை உடப்பன்படிக்கு அனுப்பி வைத்தனர். பல நாட்களாக இரவு நேர டவுன் பஸ் வரவில்லை. இரவு டவுன் பஸ் இயக்கப்பட வில்லை என்றால் திருச்சி நான்கு வழி சாலையில் மறியல் போராட்டம் நடத்துவோம் என பயணிகள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்