பெண்கள் பாதுகாப்பு சட்ட கருத்தரங்கு

பாளையங்கோட்டையில் பெண்கள் பாதுகாப்பு சட்ட கருத்தரங்கு நடந்தது.

Update: 2023-03-10 19:42 GMT

சேரன்மாதேவி:

நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் கோபாலசமுத்திரம் கிராம உதயம் இணைந்து சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் குறித்த சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கை பாளையங்கோட்டை சாந்திநகரில் நடத்தின. ெநல்லை 3-வது மாவட்ட கூடுதல் நீதிபதி பன்னீர்செல்வம் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சிக்கு கூடுதல் சார்பு நீதிபதி (சிறப்பு) மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் இசக்கியப்பன் முன்னிலை வகித்தார். கிராம உதயம் நிர்வாக இயக்குனர் சுந்தரேசன் சிறப்புரையாற்றினார். பகுதி பொறுப்பாளர் சுசிலா வரவேற்று பேசினார். கிராம உதயம் ஆலோசனை குழு உறுப்பினர் வக்கீல் புகழேந்தி பகத்சிங், தலைமை அலுவலக நிர்வாக மேலாளர் மகேஷ்வரி, பகுதி பொறுப்பாளர்கள் ஜெபமணி, சசிகலா, தனி அலுவலர் மீனாட்சி ஆகியோர் பேசினார்கள். முடிவில் முருகம்மாள் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு மரக்கன்று மற்றும் துணிப்பைகள் வழங்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்