மகளிர் காங்கிரசார் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம்
சுரண்டையில் மகளிர் காங்கிரசார் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சுரண்டை:
தென்காசி மாவட்ட மகளிர் காங்கிரஸ் சார்பில் சுரண்டை தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி முன்பு நேற்று மாலை கையில் தீப்பந்தம் ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவி சேர்மக்கனி தலைமை தாங்கினார். சுரண்டை நகராட்சி தலைவர் வள்ளி முருகன், நகர காங்கிரஸ் தலைவர் ஜெயபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி எம்.எல்.ஏ. பழனி நாடார் கலந்து கொண்டு கையில் தீப்பந்தம் ஏந்தி மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினார். ஆர்ப்பாட்டத்தில் சுரண்டை நகராட்சி உறுப்பினர்கள் உள்பட காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.