துறையூர் நகராட்சி அலுவலகத்தை காலி குடங்களுடன் பெண்கள் முற்றுகை

துறையூர் நகராட்சி அலுவலகத்தை காலி குடங்களுடன் பெண்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2023-01-04 19:42 GMT

துறையூர் நகராட்சி 16 மற்றும் 17-வது வார்டுகளுக்குட்பட்ட பகுதிகளான பட்டணம் சந்து, காந்திரோடு, அரசினர் குடியிருப்பு சாலை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 15 நாட்களாக காவிரி குடிநீர் வரவில்லை. மேலும் கழிவுநீர் கால்வாய் தூர் வாரப்படாமல் உள்ளதால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரியிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பெண்கள் சுமார் 50 பேர் காலி குடங்களுடன் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த துறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், ஆணையர் சுரேஷ்குமார் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 7 நாட்களுக்கு ஒரு முறை சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்