பெண்ணின் உடல் கருகிய நிலையில் மீட்பு

பெண்ணின் உடல் கருகிய நிலையில் மீட்கப்பட்டது.

Update: 2023-05-01 19:43 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர்

சிவகாசி புது தெருவில் வசித்து வருபவர் ஈஸ்வரி (வயது 35). இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வந்தார். தற்போது பணியில் இருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருந்தார். இந்தநிலையில் சிவகாசி அருகே உள்ள ஈஞ்சார் ரோட்டில் தனியாருக்கு சொந்தமான நிலம் அருகே கருகிய நிலையில் இவர் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மல்லி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஈஸ்வரியின் உடலை மீட்டு பரிசோதனைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பெண் துப்புரவு தொழிலாளி ஈஸ்வரி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து மல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்