மகனுடன் பெண் மாயம்; போலீசார் விசாரணை
மகனுடன் பெண் மாயம்; போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீரமங்கலம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து மகன் ராதாகிருஷ்ணன் (வயது 33). தச்சுத்தொழிலாளி. இவரது மனைவி ராஜலெட்சுமி (24). சம்பவத்தன்று ராஜலட்சுமி தனது வீட்டில் இருந்த 3 பவுன் தங்க நகைகள் மற்றும் சில ஆவணங்களை எடுத்துக் கொண்டு தனது 3 வயது மகனையும் அழைத்துக் கொண்டு சென்றவர் வெகுநேரமாகியும் வீட்டிற்கு தரும்பி வரவில்லை. இதையடுத்து அவர்களை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து கீரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மகனுடன் மாயமான ராஜலட்சுமியை போலீசார் தேடி வருகின்றனர்.