பெண்ணிடம் கத்திைய காட்டி மிரட்டி நகை பறிப்பு

திசையன்விளை அருகே பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி மர்மநபர் நகையை பறித்துச் சென்றார்.

Update: 2023-01-13 20:38 GMT

திசையன்விளை:

திசையன்விளை அருகே வடக்கு பாப்பான்குளத்தை சேர்ந்தவர் பூரணம். இவருடைய மனைவி செல்வி (வயது 46). இவர் மன்னார்புரத்தில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் சத்துணவு சமையல் பணியாளராக பணியாற்றி வருகிறார். நேற்று சமையல் வேலையை முடித்துவிட்டு அதே பகுதியில் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் செல்வியிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர் காதில் அணிந்திருந்த கம்மலை பறித்து சென்று விட்டனர்.

இதுகுறித்து அவர் திசையன்விளை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து மர்மநபர்களை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்