தூக்குப்போட்டு பெண் தற்கொலை

பாபநாசம் அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-07-02 20:37 GMT

பாபநாசம்;

பாபநாசம் அருகே உள்ள நெடுஞ்சேரி கிராமத்தை சோ்ந்தவர் ஜெயக்குமார்(வயது35). இவருடைய மனைவி வானதி (23). இவர்களுக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். சம்பவத்தன்று குடும்ப பிரச்சினை காரணமாக வானதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வானதியின் தந்தையார் முனியூர் ராஜேந்திரன் பாபநாசம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வானதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாபநாசம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வானதிக்கு திருமணமாகி 6 வருடமே ஆவதால் கும்பகோணம் உதவி கலெக்டர் லதா விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்