பெண்ணுக்கு கத்திக்குத்து

பெண்ணை கத்தியால் குத்திய கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2023-02-07 18:45 GMT

கமுதி, 

கமுதியை அடுத்த மேல கன்னிச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் ராம முருகன். தொழிலாளி. இவரது மனைவி அங்காள ஈஸ்வரி(வயது 42). ராமமுருகன் அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்வாராம். இதனால் அங்காள ஈஸ்வரி தனது மகனுடன் அபிராமத்தில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இந்நிலையில் ராம முருகன் தனது மனைவியை அழைக்க அபிராமத்துக்கு சென்றார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ராம முருகன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அங்காள ஈஸ்வரியை சரமாரியாக குத்தி விட்டு தப்பித்து ஓடினார். இதில் காயம் அடைந்த அங்காள ஈஸ்வரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இது குறித்து அபிராமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராம முருகனை தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்