கருங்கல் அருகே பெண்ணிடம் 9 பவுன் நகை பறிப்பு

கருங்கல் அருகே பெண்ணிடம் 9 பவுன் நகை பறிக்கப்பட்டது.

Update: 2022-11-24 21:11 GMT

கருங்கல்:

கருங்கல் அருகே மங்கலக்குன்று மாங்கன்றுவிளை பகுதியைச் சேர்ந்தவர் செல்லத்துரை. இவருடைய மனைவி சுசீலா (வயது 61). இவர் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக நேற்று காலை 8 மணிக்கு கருங்கல் வந்தார்.

அங்கு பொருட்களை வாங்கி விட்டு பஸ் நிலையத்திற்கு சென்ற அவர் அங்கிருந்து பஸ் ஏறி சென்றார். பின்னர் மாங்கன்றுவிளை பஸ் நிறுத்தத்தில் இறங்கினார். அப்போது அவர் கழுத்தில் அணிந்திருந்த 9 பவுன் நகையை காணவில்லை. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.

மர்மநபர் யாரேனும் நகையை சுசீலாவிடம் இருந்து பறித்து சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்