கடவூர் அருகே உள்ள வீரக்கவுண்டம்பட்டியை சேர்ந்த ஆறுமுகம். இவரது மனைவி தங்கப்பொண்ணு (வயது 50). சமையல் கூலி தொழிலாளி. இவர் கடந்த 14-ந்தேதி வழக்கம்போல் சமையல் வேலைக்கு சென்றார். ஆனால் வெகுநேரம் ஆகியும் அவர் வீட்டிற்கு வரவில்லை. இதையடுத்து ஆறுமுகம் தனது மனைவியை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து ஆறுமுகம் கொடுத்த புகாரின்பேரில், பாலவிடுதி போலீசார் வழக்குப்பதிந்து, மாயமான தங்கப்பொண்ணுவை தேடி வருகின்றனர்.