மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலி

திருவாடானை அருகே மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலியானார்.

Update: 2023-06-24 18:45 GMT

தொண்டி,

திருவாடானை மேல தெருவைச் சேர்ந்தவர் அன்பு (வயது 75). இவர் 100 நாள் வேலைத்திட்டத்தில் வேலை செய்வதற்காக கடந்த சில தினங்களுக்கு முன் மதுரை-தொண்டி சாலையில் நடந்து சென்றுள்ளார். செங்கமடை விலக்கு சாலை அருகே நடந்து சென்ற போது மோட்டார் சைக்கிள் மோதியதில் அன்பு படுகாயம் அடைந்தார். அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து திருவாடானை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தன் விருதுநகர் மாவட்டம் கூவார்குளத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்