கரும்பு டிராக்டரில் சிக்கி பெண் பலி
சின்னசேலம் அருகே கரும்பு டிராக்டரில் சிக்கி பெண் பலி
சின்னசேலம்
கள்ளக்குறிச்சி அருகே விளம்பாவூரை சேர்ந்தவர் ராமலிங்கம் மனைவி அஞ்சலை(வயது 50). இவர், தனது மகள் சிவகாமியுடன்(38) மொபட்டில் கள்ளக்குறிச்சிக்கு புறப்பட்டார். அப்போது முன்னால் கரும்பு ஏற்றி சென்ற டிராக்டரை முந்தி செல்ல முயன்றபோது நிலை தடுமாறி தாய்-மகள் இருவரும் மொபட்டில் இருந்து தவறி கீழே விழுந்தனர். இதில் அஞ்சலை மீது டிராக்டரின் பின்பக்க சக்கரம் ஏறி இறங்கியதில் அவர் உடல் நசுங்கி பலியானார். சிவகாமி லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிராக்டர் டிரைவரான தொட்டியத்தை சேர்ந்த இளையராஜா(40) என்பவரை கைது செய்தனர்.