மின்சாரம் பாய்ந்து பெண் பலி

மின்சாரம் பாய்ந்து பெண் பலியானார்

Update: 2022-07-22 20:32 GMT

சமயபுரம், ஜூலை.23-

லால்குடி அருகே உள்ள பெருவளப்பூர் மேற்கு வீதியை சேர்ந்தவர் எஸ்டேட் ராஜா. கூலித் தொழிலாளி. இவரது மனைவி மஞ்சுளா (வயது 45).இவர் வீட்டின் அருகே உள்ள மின் கம்பத்தில் இருந்து வீட்டிற்கு வரும் மின்சார வயர் அறுந்து கீழே விழுந்து கிடந்தது. இதை அறியாமல் அவர் அதனை தொட்ட போது, மஞ்சுளா உடலில் மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் சிறுகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்