கொட்டாரம் அருகே சாலையில் மயங்கி விழுந்த பெண் சாவு
கொட்டாரம் அருகே சாலையில் மயங்கி விழுந்த பெண் இறந்தார்.
தென்தாமரைகுளம்:
கொட்டாரம் அருகே உள்ள பெருமாள்புரத்தை சேர்ந்தவர் முருகன். இவருைடய மனைவி பகவதியம்மாள் (வயது 65). இவர் சம்பவத்தன்று காலை 10.30 மணி அளவில் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு மருந்து வாங்க கன்னியாகுமரி-நாகர்கோவில் சாலையில் நடந்து சென்றார். அப்போது பகவதியம்மாள் திடீரென்று சாலையில் மயங்கி விழுந்தார். இதில் அவருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பகவதியம்மாள் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி கன்னியாகுமரி போலீசில் முருகன் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.