பாம்பு கடித்து பெண் சாவு

திருமருகல் அருகே பாம்பு கடித்து பெண் சாவு

Update: 2023-06-30 18:45 GMT

திட்டச்சேரி:

திருமருகல் ஒன்றியம் அம்பல் ஊராட்சி பொறக்குடி குணர் பகுதியை சேர்ந்தவர் இளவரசன் மனைவி இந்திராணி (வயது 60). விவசாய கூலித் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள வயலில் பருத்தி எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது காலை 11 மணி அளவில் இந்திராணியை விஷப்பாம்பு கடித்து அவர் வயலில் மயங்கி கிடந்துள்ளார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் இந்திராணியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு இந்திராணியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த திருக்கண்ணபுரம் போலீசார் இந்திராணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்