சூடம் ஏற்றியபோது தீக்காயம் அடைந்த பெண் சாவு

சூடம் ஏற்றியபோது தீக்காயம் அடைந்த பெண் இறந்தார்.

Update: 2023-03-10 19:48 GMT

இனாம்சமயபுரம் ஆதி மாரியம்மன் கோவில் தேரோட்டம் கடந்த 5-ந் தேதி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். தேர் நிலையை அடைந்த பிறகு பக்தர்கள் தேருக்கு முன்பாக சூடம் ஏற்றியும், தேங்காய் உடைத்தும் வழிபடுவது வழக்கம். இந்நிலையில் தேர் நிலைக்கு வந்த பிறகு கோவில் முன்பு இனாம்சமயபுரம் டீச்சர்ஸ் காலனியைச் சேர்ந்த சரோஜா(வயது 64) என்பவர் சூடம் ஏற்றி வழிபட்டபோது எதிர்பாராத விதமாக அவரது சேலையில் தீ பற்றியது. இதில் அவருக்கு உடலில் தீக்காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்