மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழந்தாா்.
சங்கராபுரம்,
சங்கராபுரம் அருகே உள்ள மூக்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னபையன் மனைவி சாரதாம்பாள் (வயது 65). இவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து ஆஸ்பத்திரிக்கு தனது மகன் அரவிந்தனுடன் மோட்டார் சைக்கிள் பின்னால் அமர்ந்தபடி சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்ததில், சாரதம்பாளுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி சாரதாம்பாள் நேற்று காலை இறந்தார். இது குறித்து சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்ம ஜோதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.