கண்மாயில் தவறி விழுந்து பெண் பலி

கண்மாயில் தவறி விழுந்து பெண் பலியானார்.

Update: 2023-05-22 18:42 GMT

காரையூர் அருகே காயாம்பட்டியை சேர்ந்தவர் முருகேசன். விவசாயி. இவருக்கு ராஜேஸ்வரி மற்றும் பானுப்பிரியா (வயது 27) என்று 2 மனைவிகள் உள்ளனர். இதில் 2-வது மனைவியான பானுப்பிரியா நேற்று முன்தினம் வீட்டிற்கு சமையல் செய்ய விறகு சேகரிக்க காயாம்பட்டி குருந்தடி கண்மாய் பகுதிக்கு சென்றவர் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரை அவரது உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று குருந்தடி கண்மாயில் பானுப்பிரியாவின் உடல் மிதந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த காரையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பானுப்பிரியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னமராவதி அரசு பாப்பாயி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நீச்சல் தெரியாத நிலையில் பானுப்பிரியா கண்மாயில் தவறி விழுந்து உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்