கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து பெண் சாவு

கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து பெண் பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-06-05 21:12 GMT

தென்தாமரைகுளம்:

நாகர்கோவில் தோப்பு வணிகர் தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவருடைய மனைவி சுசீலா. இவர்களுடைய மகள் தேவி (வயது 37). திருமணமான இவர் கணவனை பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்தநிலையில் இவர் கடந்த சில மாதங்களாக அகஸ்தீஸ்வரம் அருகில் உள்ள சுக்குப்பாறை தேரிவிளையில் வசித்து வரும் தனது சகோதரி சத்யா வீட்டில் தங்கி வந்தார்.

தேவி நேற்று மாலையில் வீட்டில் உள்ள கழிவுநீர் தொட்டிக்குள் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதனால் அவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சத்யா தென்தாமரைகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேவியின் உடலை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து பெண் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்