கள்ளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு
கள்ளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழந்தார்.
சங்கராபுரம் அருகே உள்ள சிங்காரப்பேட்டையை சேர்ந்தவர் தயாளன் மனைவி பவுனாம்பாள்(வயது 64). இவர் அதே பகுதியை சேர்ந்த கந்தன் மகன் சுரேந்திரன் (வயது 25) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் கள்ளக்குறிச்சி நோக்கி வந்து கொண்டிருந்தார். கள்ளக்குறிச்சி அருகே சிறுவங்கூர் சாலையில் வந்து கொண்டிருந்தபோது பவுனாம்பாள் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீேழ விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு டாக்டா்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பவுனாம்பாள் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.