மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு

சங்கராபுரம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு

Update: 2023-02-03 18:45 GMT

சங்கராபுரம்

சங்கராபுரம் அருகே உள்ள பாவளம் கிராமத்தை சேர்ந்தவர் நடேசன் மனைவி வள்ளி(55). சம்பவத்தன்று வள்ளி அவரது உறவினர் மகன் அருள்பாண்டியனுடன் மோட்டார் சைக்கிளில் சங்கராபுரத்தில் இருந்து பாவளம் நோக்கி வந்து கொண்டிருந்தார். சங்கராபுரம் மும்முனை சந்திப்பு அருகே வந்தபோது நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்த வள்ளியை அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திாியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து நடேசன் கொடுத்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முகமது முஸ்தபா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்