மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் பலி

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் பலியானார்.

Update: 2022-11-01 20:27 GMT

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் பலியானார்.

பெண் பலி

முசிறி அருகே உள்ள அட்டலாப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி புவனேஸ்வரி (வயது 28). சம்பவத்தன்று புவனேஸ்வரி தனது தந்தை துரைசாமி (58) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் நாமக்கல் அருகே உள்ள வளையப்பட்டி கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தார்.

உடையாகுளம்புதூர் அருகே சென்ற போது, திடீரென்று புவனேஸ்வரி மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த புவனேஸ்வரி நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து காட்டுப்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்