தீக்குளித்து பெண் தற்கொலை

தீக்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-08-06 21:13 GMT

காரியாபட்டி,

காரியாபட்டி அருகே உள்ள புலியூரான் கிராமத்தை சேர்ந்தவர் சுப்புதாய் (வயது 38). இவர் தனது வீட்டின் அருகே குடியிருந்து வரும் ஒருவருக்கு 5 பவுன் நகையை கொடுத்ததாகவும், அந்த நகையை 4 ஆண்டுகள் ஆகியும் அந்த நபர் திருப்பி கொடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இந்ததகவல் சுப்புத்தாயின் கணவருக்கு தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சுப்புத்தாய் தனது வீட்டை பூட்டிக்கொண்டு மண்எண்ணெய்யை உடலில் ஊற்றி தீ வைத்தார். உடனே அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து சுப்புத்தாயை மீட்டு அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சுப்புத்தாய் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்