பெண் தீக்குளித்து தற்கொலை

பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-09-03 19:19 GMT

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மேலூர் கிராமத்தில் உள்ள ரோட்டுத்தெருவை சேர்ந்தவர் ஜெகதீசன். இவரது மனைவி ராணி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த கோவிந்தராசுவுக்கும் இட பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இது குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ராணிக்கு சொந்தமான நிலத்தில் கோவிந்தராசு குடும்பத்தினர் ஆடு, மாடுகளை மேய்த்ததாகவும், அதனை தட்டிக்கேட்ட ராணியை திட்டி தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து போலீஸ் நிலையத்தில் ராணி புகார் அளித்தும், யாரும் வராததால் மன உளைச்சலில் இருந்த ராணி வீட்டில் யாரும் இல்லாதநேரத்தில் மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் உடல் முழுவதும் தீ பரவிய நிலையில் அவர் அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து ராணியை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்