மதுரை தெப்பக்குளத்தில் குதித்து பெண் தற்கொலை

மதுரை தெப்பக்குளத்தில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்

Update: 2022-11-23 19:56 GMT


மதுரை காமராஜர் சாலை மாரியம்மன் கோவில் எதிரே உள்ள தெப்பக்குளத்தில் 40 வயதுடைய ஒரு பெண்ணின் உடல் மிதிப்பதாக நேற்று காலை போலீசாருக்கு தகவல் வந்தது. உடனே தெப்பக்குளம் போலீசார் அந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பெண் யார், அவர் எந்த ஊரை சேர்ந்தவர், எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்