காதல் திருமணம் செய்த 8 மாதத்தில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை
திருப்பத்தூர் அருேக காதல் திருமணம் செய்த 8 மாதத்தில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருப்பத்தூர் அருேக காதல் திருமணம் செய்த 8 மாதத்தில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காதல் திருமணம்
திருப்பத்தூர் தாலுகா ஆதியூர் கிராமத்தை சேர்ந்தவர் சக்கரவர்த்தி (வயது 24), கட்டிட மேஸ்திரி. இவரது உறவினரான நத்தம் கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவரது மகள் கீர்த்திகா (20). இவர்கள் இருவரும் காதலித்து இரு வீட்டாரின் சம்மதத்துடன் 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் வீட்டில் மாடியில் துணிகளை துவைத்து காயப்போடும் போது கயிறு அறுந்து விட்டதால் கணவர் சக்கரவர்த்தி கயிற்றை சரியாக கட்ட மாட்டீங்களா என கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதனால் கிருத்திகா கோபித்துக்கொண்டு கீழே சென்று சேலையில் தூக்கு மாட்டிக்கொண்டுள்ளார். மனைவியை காணவில்லை என்று சக்கரவர்த்தி கீழே வந்து பார்த்த போது தூக்கில் தொங்கிக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து அவரை கீழே இறக்கி திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
சப்-கலெக்டர் விசாரணை
கீர்த்திகாவின் தந்தை பிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில் கந்திலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தற்கொலை செய்து கொண்ட கீர்த்திகாவுக்கு திருமணமாகி 8 மாதங்களே ஆவதால் சப்-கலெக்டர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.